Tuesday, December 28, 2010

Semmozhi Poonga Visit

வணக்கம்!





கடந்த ஞாயிறு நானும் என் மனைவியும் செம்மொழி பூங்காவிற்கு சென்றிருந்தோம். எக்ஸ்பிரஸ் அவென்யு பார்க்கலாமென கிளம்பினோம். ஸ்பென்சர் பிளாசாவில் கும்பல் கம்மியாகிவிட்டது . அங்கே குழந்தைகளுக்கென ஒரு உலகம் இருக்கிறது. பெற்றோர்களுக்கு பர்ஸ் காலியானாலும் அவர்களின் குதூகலத்திற்கு முன்னால் பணம் ஒன்றுமேயில்லை. சத்யம் எஸ்கேப் இல் டிக்கெட் கிடைக்கவில்லை. என் மனைவிக்கு லைப் ஸ்டைல் இல் ஒரு டாப் உம், ஒடிஸ்சியில் எனக்கு ப்ளேபாய் உம் வாங்கிகொண்டு வரும்வழியில் செம்மொழி பூங்காவிற்கு வந்தோம். அ.ராசாவை மறக்க செய்கிறது கலைஞரின் செம்மொழி பூங்கா. பெயர் அட்டையுடன் கூடிய பலவகை தாவரங்கள் மற்றும் மலர் செடிகள் கண்ணை நிறைத்தன. ஒரு குட்டி அருவி இருக்கிறது. அதன் கீழ் நீர் தேக்கத்தில் பத்து வாத்துகள் நீந்துகின்றன. சென்னையில் இருக்கும் உணர்வே இல்லை. பொறுமையாக சுற்றிவந்தால் ஒரு மணிநேரம் கடந்து விடுகிறது. பைக் இல் சென்றால் 5  ரூபாய் பார்கிங் டிக்கெட். என்ட்ரி டிக்கெட் 5 ரூபாய். மொத்தத்தில் பத்து ரூபாயில் ஒரு மினி சுற்றுலா செல்லுங்கள். கொஞ்சம் இயற்கையோடு இருந்து வாருங்கள். நன்றி!